search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்தை விட்டு யானைகள் வெளியேறாமல் இருக்க தொங்கும் மின்வேலி அமைப்பு
    X

    வனத்தை விட்டு யானைகள் வெளியேறாமல் இருக்க தொங்கும் மின்வேலி அமைப்பு

    • கலெக்டர் ஒதுக்கிய நிதியிலிருந்து உடனடியாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தொங்கும் சூரிய மின்வெளி அமைக்கப்பட்டது.
    • நேற்று முதல் சூரிய மின்வெளியை பாலக்கோடு வனத்துறையினர் செயல்பட தொடங்கி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வனம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, உள்ளிட்ட வனப்பகுதிகள் யானைகள் அதிகமாக வசிக்கிறது.

    கோடைகாலங்களில் உணவு தண்ணீர் தேடி வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி பஞ்சாயத்து ஈச்சம்பள்ளம் பகுதியில் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஒதுக்கிய நிதியிலிருந்து உடனடியாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தொங்கும் சூரிய மின்வெளி அமைக்கப்பட்டது.

    இந்த பணிகள் முடிந்ததை அடுத்து பேவுஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் மற்றும் ஊர் கவுண்டர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முதல் சூரிய மின்வெளியை பாலக்கோடு வனத்துறையினர் செயல்பட தொடங்கி வைத்தனர்.

    Next Story
    ×