search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி பகுதியில்  கடும் பனிமூட்டம்
    X

    செஞ்சி பகுதியில் பனி மூட்டம் நிலவிய காட்சி.

    செஞ்சி பகுதியில் கடும் பனிமூட்டம்

    • செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது.
    • இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது.

    விழுப்புரம்:

    மழை பெய்ய வேண்டிய இந்த சமயத்தில் செஞ்சி பகுதியில் நேற்று திடீரென கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டி சென்றனர். இந்த பனி மூட்டம் காலை 7மணி வரை நீடித்தது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் பனிமூட்டம் இருக்கும். தற்போது மழை காலம். எனேவ பனிமூட்டம் இருப்பது இல்லை. இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது. அது போல் இயற்கையும் மாறுகிறது என்றார்.

    Next Story
    ×