search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில் விடிய விடிய கனமழை:  குடியிருப்பு, கோவிலில்  மழை நீர் புகுந்தது
    X

    மரக்காணத்தில் விடிய விடிய கனமழை: குடியிருப்பு, கோவிலில் மழை நீர் புகுந்தது

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
    • அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி குளம் போன்ற முக்கிய நீர் நிலைகளில் வெகுவாக தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவ சாயிகளும். நேற்று இரவு முதல் இன்று காலை வரை யில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த கனமழையால் இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மரக்காணம் சன்னதி வீதி அம்பேத்கர் நகர் செல்லி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் இதுபோல் மரக்காணம் தாழங்காடு சாலையிலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    Next Story
    ×