என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரிஷிவந்தியம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு
- தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரடியாக விவசாயிகளின் வயலில் தோட்டக்கலை துணை இயக்குனர் சு.சசிகலா ஆய்வு செய்து தோட்டக்கலை புதிய தொழில்நுட்பம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாசர், மரூர், முட்டியம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு, சீர்பாத நல்லூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியம் வழங்கப்பட்டு தற்போது உற்பத்தி செய்து வரும் காளான் வளர்ப்பு குடில், கடுவனூர் கிராமத்தில் புதிய பரப்பு விரிவாக்கம், பழப்பயிர் இனத்தின் கீழ் பாக்கு நடவு செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக பப்பாளி, வாழை நடவு தோட்டத்தினையும், உயர்ரக தோட்டக்கலை தொழில்நுட்ப சாகுபடி இனத்தின் கீழ் துறையின் மூலம் பிளாஸ்டிக் நிலப் போர்வை மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கூடலூர், மருர், சீர்பாதநல்லூர் ஆகிய கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் தமிழக அரசின் மூலம் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் திட்ட இனத்தின் வாரியாக பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகள் மற்றும் அக்கிராம பொறுப்பு அலுவலரிடம் அடுத்த கட்ட பணிகளான தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு செம்மைப்படுத்தும் நோக்கில் விருப்பமுள்ள தகுதியான விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் விரும்பும் சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உரிய ஆவணங்கள் இணையத்தில் பதிவு மற்றும் பணி ஆணை வழங்கி சொட்டுநீர் பாசன வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து விவசாயிகளுக்கு நீண்ட காலம் வருமானம் தரக்கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, பாலா, தேக்கு உள்ளிட்ட ஏனைய பல்லாண்டு பழ பயிர்கள் மற்றும் மர பயிர்களை நடவுப் பணிகள் , பயிர் பராமரிப்பு பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளுமாறு மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட மானியங்கள் பயன்பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது ரிஷிவந்தியம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை துணை அலுவலர் சிவனேசன் தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜேஷ், சீனிவாசன், வேலன் வேளாண்மை உதவி அலுவலர் நசுருல்லா, அப்பாஸ் கிராம பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்