என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தப்பட்ட பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு
- ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
- கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் என்கிற ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் மதன்குமார். அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மகாலட்சுமி பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கும் வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனம் திருந்திய மகாலட்சுமி மீண்டும் கணவர் ராஜாவுடன் சேர்ந்து வாழ திரும்பி வந்தார். காதலி மகாலட்சுமி பிரிந்து சென்றதால் கோபம் அடைந்த கார்த்திக், கடந்த 7-ந்தேதி, விருகம்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனை மகாலட்சுமியின் மகன் மதன்குமார் கண்டித்தார்.
இதனால் கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மதன் குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதன்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.