என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் மாணவர்கள் ரத்ததானம்
- எச்.டி.எப்.சி வங்கி கிளையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தது.
- மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மேலாண்மையியல் துறையும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி எச்.டி.எப்.சி வங்கி கிளையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தது. இதில் ஆராய்ச்சி மையத்தில் பயிலக்கூடிய 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வை ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம், மேலாண்மையில் துறை தலைவர் கார்த்திகேயன் ஆங்கிலத்துறை தலைவரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான கோவிந்தராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வின் மூலமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எச்.டி.எப்.சி கிருஷ்ணகிரி வங்கி மேலாளர் விஜயராஜ், தருமபுரி வங்கி கிளை மேலாளர் அம்பிகேஸ்வரன் மற்றும் தருமபுரி வங்கி உதவி மேலாளர் பிரகாஷ், ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.