search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  தொடர்ந்து 4-வது நாளாக கொட்டிய கனமழை  -வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு
    X

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அழகாபுரி குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள மழை நீர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக கொட்டிய கனமழை -வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு

    • பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வீட்டி லேயே முடங்கியுள்ளனர்.
    • வடிகால் வசதி இல்லாததாலும், சாலையை முறையாக அமைக்காததுமே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தருமபுரி, இரவு பகலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வீட்டி லேயே முடங்கியுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பொம்மிடி, கம்பை நல்லூர், கடத்தூர் போன்ற பகுதிகளில் இன்று காலை யும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    நல்லம்பள்ளியில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டியது. இதனால் பேருந்து ஸ்டாப் பகுதியில் தொப்பூர்-தருமபுரி சாலையின் பகுதியில் சாலை முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் அப்பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்திருந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அழகாபுரி குடியிருப்பில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து சாலைகளில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் ஒரு சில வீடுகளில் மழைநீர் உட்புகுந்து விட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் உள்ள நிலையில், பாம்பு போன்ற விஷஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது. இந்த பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாததாலும், சாலையை முறையாக அமைக்காததுமே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தேங்கியிருக்கும் மழைநீர் உடனே வடிவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, தேன்கனி க்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி-5மி.மீ, பாலக்கோடு-16.40மி.மீ, மாரண்டஅள்ளி- 22 மி.மீ, பென்னாகரம்- 18 மி.மீ, ஒேகனக்கல்- 20.80 மி.மீ, அரூர்-14 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி-10 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

    Next Story
    ×