என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், குட்கா பொருட்கள் பறிமுதல்
- வட்டார சுகாதார அலுவலர் சிவகுரு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- உணவு பொருட்கள், போலி சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள நகரத்தின் முக்கிய வீதிகளான பஸ் நிலையம், ஸ்தூபிமைதானம், எம்.ஜி.ரோடு, கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார சுகாதார அலுவலர் சிவகுரு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஹான்ஸ், குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையைடுத்து அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர், காலாவதியான பிஸ்கட் பாக்கெட், உணவு பொருட்கள், போலி சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஓட்டல்,பேக்கரி கடைகள், பல்பொருள் அங்காடிகள், நடைபாதை கடைகள்,டீ கடைகள்,சாலையோர தனியார் பால் விற்பனை கடைகள், மொத்த மற்றும் சில்லறை மளிகை கடைகளிலும் 300 கிலோ பிளாஸ்டிக், 70 கிலோஹான்ஸ், 70 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.