search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரப்பட்டியில்   உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு
    X

    கண்காட்சியை கலெக்டர் சாந்தி பார்வையிட்ட போது எடுத்தபடம்.

    பாப்பாரப்பட்டியில் உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு

    • பாரம்பரிய ரகங்கள் பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே அதிக ஆர்வம் உள்ளது.
    • பாரம்பரிய ரகங்கள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து உலக உணவு தினத்தினை ஒட்டி உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று பாப்பாரப்பட்டியில் நடந்தது.

    இதில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார். இதில் 20-க்கும் மேற்பட்ட பாராம்பரிய விவசாயிகள் காட்சிப்படுத்தியிருந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரக விதைகள், பயிர்கள், 100-க்கும் மேற்பட்ட காய்கறி விதைகள், காட்சிப் படுத்ப்பட்டிருந்தன.

    இதில் 6 அடி உயரமான காட்டுயானம், வெள்ளத்தினால் பாதிக்கப்படாத மஞ்சள், வெள்ளை ராகி, மற்றும் பாரம்பரிய ரகங்களின் தொகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தன.

    இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியாதாவது:-

    பாரம்பரிய ரகங்கள் பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே அதிக ஆர்வம் உள்ளது. இதில் விவசாயிக்கு விதைக்கான செலவு இல்லை. பாரம்பரிய ரகங்கள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும். ரசாயன உரங்கள் தேவை இல்லை.

    சுவை அதிகம், தனித்தன்மை உடையது. பூச்சி நோய் தாக்குதல் குறைவு, தரமான மகசூல். ஒவ்வொரு ரகமும் தனித்தன்மை வாய்ந்தது. அதிக விலைக்கு விற்கலாம். மருத்துவ குணம் வாய்ந்தது.

    தற்போது பராம்பரிய ரகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் விலை கிடைக்கும். மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம். ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம். விவசாயிகள் வருமானம் பெருகும்.

    தற்போது பாரம்பரிய ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை கிடங்கிலேயே மானிய விலையில் பாரம்பரிய நெல் வகைகள் இந்த ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது தருமபுரி மாவட்டம் சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இனிமேல் நியாவிலைக் கடைகளிலும் ராகி போன்ற சிறுதானியங்கள் விரைவில் கிடைக்கும். இதனால் சிறுதானியம் விளைவிப்போருக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறினார்.

    இந்தக் கருத்தரங்கில் பாப்பரப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் வேளாண்மை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களை நன்றாக படிக்கவேண்டும் என்ற ஊக்கப்படுத்தினார். இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் பாப்பாரப் பட்டி வோளாண் அறிவியல் நிலைய தலைவர் வெண்ணிலா மற்றம் உதவி வேளாண்மை அலுவர் கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் முடிவில் பென்னா கரம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணி நன்றி கூறினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட அட்மா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×