search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,327 வழக்குகளுக்கு சமரச தீர்வு
    X

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,327 வழக்குகளுக்கு சமரச தீர்வு

    • இவற்றில் 1200 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 3 ஆயிரத்து 626 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
    • 245 வங்கி வாரா கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தருமபுரி,

    தருமரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் பங்கேற்று சமரச தீர்வு காணும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

    வழக்குதாரர்கள், வக்கீல்கள் விசாரணையில் கலந்து கொண்டனர். 1327 வழக்குகளுக்கு சமரச தீர்வு இந்த மக்கள் நீதிமன்றத்தில், தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய 2693 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இவற்றில் 1200 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 3 ஆயிரத்து 626 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதேபோல் 245 வங்கி வாரா கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இவற்றில் 127 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 95 லட்சத்து 22 ஆயிரத்து 122 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    விசாரணையின் முடிவில் மொத்தம் 1327 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.7 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரத்து 748-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

    Next Story
    ×