என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடுமலையில் போதைப் பொருள் விழிப்புணர்வுப் பயணம்
- போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழி வேல் இன்று துவக்கி வைத்தார்.
- நிர்வாகிகள் எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு, சக்கரபாணி உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழி வேல் இன்று துவக்கி வைத்தார். உடுமலையில் இருந்து ஈரோடு வரையில் செல்லும் இந்த இளைஞர்கள் பொதுமக்களுக்கு வழிநெடுக விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கியபடி செல்கின்றனர்.காவல்துறை, தேஜஸ் ரோட்டரி, ரோட்ராக்ட் சங்கங்கள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தன. நிர்வாகிகள் எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு, சக்கரபாணி உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.
Next Story






