என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலையில் நடை மேம்பாலம் திறக்கப்படுமா?
- தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை வருகின்றனர்.
- நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடுமலை :
உடுமலையில் கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் உள்ளது. கோவை ,பாலக்காடு ,பொள்ளாச்சி ,ஊட்டி ,திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு உடுமலை வழியாக பஸ்கள் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை வருகின்றனர்.
பஸ் நிலையம் வெளியே பொள்ளாச்சி ரோடு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் பயணிகள்- பொதுமக்கள் பொள்ளாச்சி ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர்.
இதையடுத்து உடுமலை நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
இதனால் மக்கள் ரோட்டை கடக்க சிரமப்படுவது தொடர்கிறது.அவசரமாக ரோட்டை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது .எனவே நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.