search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டில்  தொங்கி செல்லும் மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்த போலீசார்
    X

    பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்களை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தார். 

    விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்த போலீசார்

    • விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்களை போலீசார் உறுதிமொழி ஏற்க வைத்தனர்.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அல்லா தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்க விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ,விக்கிரவாண்டி, திண்டிவனம் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் மாணவர்கள் மீண்டும் மீண்டும் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார் .

    இதையடுத்து விழுப்புரம் டி.எஸ்.பி. பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் போக்குவரத்து போலீஸ்இன்ஸ்பெக்டர் வ சந்த் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம், ரமேஷ் குமார்மற்றும் போக்குவரத்து போலீசார் பஸ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை யின்போது பஸ் படி க்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், பஸ்களில் இருந்து கீழே இறக்கிவிட்டு அந்த மாணவர்களின் பெயர், முழு முகவரியை பள்ளி, கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து பெற்று அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்த ப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அல்லா தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் பஸ் படியில் உயிரினை உச்சமாக மதித்து சாகசங்கள் புரிய நினைக்கும் மாணவர்களை அழைத்துஇதுபோல் பஸ் படியில் பயணம் செய்ய மாட்டோம் எனஉறுதி மொழி ஏற்க வைத்து அதன் பின்னர் அவர்களை அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×