search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் கல்வி பாதுகாப்பு அமைப்பு தொடக்க விழா:பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பங்கேற்பு
    X

    பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பங்கேற்றார்.

    விழுப்புரத்தில் கல்வி பாதுகாப்பு அமைப்பு தொடக்க விழா:பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பங்கேற்பு

    • உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள்

    விழுப்புரம்:

    உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேலூர் காவல்துறை சரகஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கவிஞர் கனககேசன்,பார்த்திபன், ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பேசியதாவது, சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .

    அதுபோல் நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அனைத்து செல்வங்களையும் பெற முடியும் குறிப்பாக நாம் இருக்கும் வீடு நாம் இருக்கும் சுற்றுப்புறம் நாம் இருக்கும் பகுதி நாம் இருக்கும் ஊர் சுகாதாரமாக இருக்க வேண்டும். மேலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் மிக அற்புதமாக உள்ளது. இந்த அமைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இவ்வமைப்பின் நிறுவனர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில்அய்யனாரப்பன்,சுரேஷ்,சங்கீத்குமார்,ராகவேந்திரன், அய்யனார். சுரேந்திரன் பாஸ்கரன் சிவராஜ் சரத்குமார் சக்திவேல் ஐயப்பன் கந்தன் கல்யாண சுந்தரம் அபூபக்கர் சாந்தமுருகன், மணிகண்டன், ராம்குமார் உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×