search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைச்சல் குறைவால் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை-பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை 2 மடங்காக அதிகரிப்பு
    X

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள வாழைத்தார்கள்-வாழை இலை கட்டுகளை படத்தில் காணலாம்.

    விளைச்சல் குறைவால் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை-பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை 2 மடங்காக அதிகரிப்பு

    • தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
    • செவ்வாழை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய காய்கறி சந்தையாக பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது.

    இந்த தினசரி சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், உள்ளூர் வரத்து இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    வாழைத்தார்களில் ரோபஸ்டோ, நாடு, கோழிக்கூடு ஆகிய ரகங்களின் விலையானது ரூ.150 முதல் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 மடங்காக விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று செவ்வாழை ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. வாழை இலை கட்டுகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதன் விலை ஏற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×