என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை
- ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் உள்ளோம்.
- தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மறுநிதியளித்துக்கொள்ளலாம்.
திருப்பூர் :
ரெப்போ விகித உயர்வு பாதிப்பில் இருந்து தடுக்க, வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதமாக உயர்த்தி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஏற்ற இறக்க சூழ்நிலை, பணவீக்கம், மூலதனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியும் 25 அடிப்படை புள்ளிகளையும், பாங்க் ஆப் இங்கிலாந்து 50 அடிப்படை புள்ளிகளையும் உயர்த்தியது.
வெளிநாட்டு பணங்களில் அதிக ஏற்ற இறக்கம், பணவீக்கம், மக்களிடம் வாங்கும் சக்தி குறைதல், பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் உலக வெளிநாட்டு வர்த்தகம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. ஏற்றுமதி கடன் விகிதங்களில் மேலும் அதிகரிப்பு என்பது போட்டித்தன்மையை மழுங்கடிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பணத்தின் அதிக ஏற்ற இறக்கம் உள்ள நாடுகளின் வர்த்தகத்தை நமது போட்டியாளர்களிடம் இருந்து நாம் இழந்து வருகிறோம். கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை விட வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வட்டி மானியத்தை அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்–டும்.
அன்னிய செலாவணியில் ஏற்றுதிக்கடன் காலத்தை 180 நாட்களில் இருந்து 365 நாட்களாக நீட்டிக்க வேணடும். ஏற்றுமதி மறுநிதியளிப்பு வசதியை வங்கிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். ஏற்றுமதியளர்களுக்கு ஏற்றுமதி கடனை ரூபாயில் வழங்க வங்கிகள் ஊக்குவிக்கப்படலாம். அதே தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியால் மறுநிதியளிப்பு செய்யலாம். இது குறித்து மத்திய நிதி மந்தி–ரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:- ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று ஏற்றுமதியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இது திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி செயல்திறனை நேரடியாக பாதிக்கும். ஏற்றுமதியில் டாலரை பொறுத்தவரை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது. வரும் மாதங்களில் ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் உள்ளோம்.
வட்டி விகித உயர்வில் இருந்து பாதுகாக்க, ஏற்றுமதிக்கடனை அதிகரிக்க வங்கிகளுக்கு ஏற்றுமதி மறு நிதியளிப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அதுபோல் வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வட்டி மானியத்தை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் செயல்படுத்திக்கொடுக்க வேண்டும். ரூபாய் மதிப்பில் வங்கிகள் ஏற்றுமதிக்கடனை வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கும் அதே தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மறுநிதியளித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்