என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட மகளிரணி மற்றும் தொண்டரணி பொறுப்புகளுக்கு நேர்காணல்
- மண்டல பொறுப்பாளருமான ரேகா பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.
- கழகத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் மகளிர் தொண்டரணி பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நேர்காணலை மாநில மகளிரணி செயலாளர்கள் ஹெலன்டேவிட்ஸன், நாமக்கல் ராணி மற்றும் மண்டல பொறுப்பாளருமான ரேகா பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.
அப்போது நேர்காணலில் பங்கு பெற்றவர்களிடம் அவர்களது வயது, எத்தனை ஆண்டுகளாக கழகத்தில் உறுப்பினராக உள்ளீர்கள், கழகத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்த நேர்காணலின் போது மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி. மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், மல்லமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






