search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பூஜை
    X

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பூஜை

    • விழாவை முன்னிட்டு பவானி அம்மாக்களுக்கு உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
    • குருநாதர் சத்தியம்மா பெண் உருவத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா நடைபெற்றது.

    31-வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை திருவிழாவை முன்னிட்டு குருநாதர் சக்தியம்மா தனது சிறுவயதில் அருள் வாக்கு பலித்ததற்காக சென்னையில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் தனது நாவினில் குடிகொண்ட நாளையே மகாபெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு சிறப்பு பால், தயிர், தேன்,சந்தனம், குங்குமம் உள்பட 21 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. வருடம் தோறும் இந்நாளில் குருநாதர் சத்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.

    குருநாதர் சக்தியம்மா பெண் வேடத்தில் அருள் வாக்கு கொடுக்கும் இந்நாளில் பக்தர்கள் குருநாதர் சக்தியம்மா விற்கு சேலை எடுத்து கொடுக்கும் போது நமக்கு வாழ்வில் அனைத்து நலமும் கிடைக்கும், மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அருள்வாக்கு ஒரு வருடத்திற்குரிய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×