search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது ஏற்காட்டில் 46 -வது கோடை விழா, மலர்கண்காட்சி
    X

    ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் கோடைவிழா, மலர் கண்காட்சி வருகிற 21-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் பூத்து குலுங்கும் மலர்களை படத்தில் காணலாம்.

    வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது ஏற்காட்டில் 46 -வது கோடை விழா, மலர்கண்காட்சி

    • சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
    • மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    ஏற்காடு:

    சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. ஆகும்.

    மலைகளின் இளவரசி

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வளைந்து நெளிந்த மலைப்பாதைகள், விண்ணை முட்டும் மரங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை கடந்து சென்றால், பரந்து விரிந்த ஏரியும், படகு சவாரியும் கவனம் ஈர்க்கிறது.

    இது மட்டுமின்றி அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், தலைச்சோலை என்று ஒவ்வொரு இடமும் இயற்கை அழகால் இதயம் வருடுகிறது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை என 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு ஊராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் தமிழரசி, தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ், ஏற்காடு ஊராட்சி ஒன்றி ஆணையாளர் அன்புராஜ், தாசில்தார் தாமோதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சுற்றுலா துறை, ேதாட்டக்கலை துறை, தீயணைப்புதுறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ஒரு வழிபாதையாக மாற்றம்

    கூட்டத்தில், கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பது, சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்த இடம் ஒதுக்குவது, போக்குவரத்தை சீர்படுத்த கூடுதலான போலீசாரை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் சுறறுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வது, மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை பாதையை ஒருவழி பாதையாக மாற்றுவது பற்றி யும், ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளையும் செய்து தருவது பற்றி விவா திக்கப்பட்டது. கேடைவிழா நடைபெறும் 8 நாட்களுக்கும் சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வும் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×