என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உளுந்தூர்பேட்டை அருகே வன அலுவலர் மனைவியிடம் நகை பறிப்பு உளுந்தூர்பேட்டை அருகே வன அலுவலர் மனைவியிடம் நகை பறிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/29/1889085-chainparippu.webp)
உளுந்தூர்பேட்டை அருகே வன அலுவலர் மனைவியிடம் நகை பறிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரிகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
- அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 40). உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்றார். ஹரிகிருஷ்ணன் மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கவிதாவின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில் திடுக்கெட்டு எழுந்த கவிதா திருடன் திருடன் என்று கூச்சலிட்டு தாலிச் சங்கிலியை இழுத்தார். இதில் பாதி தாலிசங்கிலியுடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றான். இது குறித்து ஹரிகிருஷ் ணன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். வனத்துறை அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.