என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
- ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 754 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 748 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளைபாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 754 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 748 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 99.02 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் மாணவி அபிராமி 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்களும், மாணவர் புகழ்வர்மன் 589 மதிப்பெண்களும், மாணவர் அமீன் 587 மதிப்பெண்களும், மாணவி ஷெரின் 587 மதிப்பெண்களும், மாணவர் புவனேஸ்வர்குமார் 587 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும்கணித பாடத்தில் 9 பேரும், இயற்பியல் பாடத்தில் 6 பேரும், வேதியியல் பாடத்தில் 30 பேரும், உயிரியல் பாடத்தில் 5 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 5பேரும், வணிகவியல் பாடத்தில் ஒரு வரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 3 பேர் எனமொத்தம் 59 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது தவிர 590 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும்,580-589 மதிப்பெண்கள் வரை 21 பேர், 570-579 மதிப்பெண் வரை 39 பேர், 550-569 மதிப்பெண்கள் வரை 78 பேர், 500 முதல் 549 மதிப்பெண்கள் வரை 216 பேர், 450 முதல் மதிப்பெண்கள் வரை 412 பேர், 400 முதல் 449 மதிப் பெண்கள் வரை 568 பேர் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜே ந்திரன், பள்ளிமுதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.