என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு நிர்ணயத்தை விலையில் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும் வேளாண் அதிகாரி தகவல்
- நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.
- விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனி யார் உர நிறுவன நிலை யங்களில் யூரியா 2 ஆயிரத்து 558 மெட்ரிக் டன், டிஏபி1,243 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,113 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 679 மெட்ரிக் டன்மற்றும் காம்ப்ளக்ஸ் 3,424 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.
இதனை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களு க்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டு றவு விற்பனை நிலை யங்களில் அரசு நிர்ண யித்த விலையில் மட்டும் விற்பனை விவசாயி களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.