என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
- விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32-வது சுற்று கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 2,448 மையங்களில் நடைபெற்றது.
இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தி யவர்கள் மூன்றாவதாக முன்னெ ச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டு பய ன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு குழுவினர் மூலம் மாவட்ட முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,870 பேருக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25 ஆயிரத்து 95 பேருக்கும், ஆக மொத்தம் 31, 235 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் தங்களுடைய செல்போனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் எவ்வாறு எஸ்.எம்.எஸ்.வந்தது. சுகாதாரத்துறை பணி யாளர்கள் அலட்சி யமாக செயல்படுகிறார்களா? அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்துவ தற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சுகாதாரப் பணியாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.