என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன்மலை பகுதியில்  2000 லிட்டர் சாராய  ஊறல் அழிப்பு
    X

    கல்வராயன்மலை பகுதியில் 2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

    4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை பகுதியில் குரும்பாலூர், குரும்பாலூர் ஏரிக்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பதாகவும் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராய பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மேற்பார்வையில் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு செய்தனர்.

    கரியாலூர் 5 சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் குரும்பாலூர் மற்றும் ஏரிக்கரை பகுதியில் சாராய ரெய்டு செய்தனர்.

    அப்போது 4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அருணாசலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×