என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் இன்று பகவதி அம்மன் கோவிலில் மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி சாமி கும்பிட்டார்
- விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார்
- கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.
கன்னியாகுமரி :
மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி பிரித்தீவ் ராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அவர் மாலை 6-20 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் சூரியன் மறைந்த காட்சியை கண்டு களித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார். 2-வது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு நின்ற படி சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். இங்கு வந்து அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புஅளித் தனர். அதன் பிறகு அவர் பகவதி அம்மன் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகு துறைக்கு சென்றார். அங்கு வந்து அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவருக்கு சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.அதன் பிறகு அவர் படகு மூலம் அருகில் உள்ள திருவள்ளுவர் பாறைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வியந்தார். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சென்றதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை 10 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு விவேகா னந்தர் மண்டபத்துக்கு தொடங்கியது அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்தனர். அவர் சென்ற பாதையான விவேகானந்தர் ராக் ரோடு மற்றும் சன்னதி தெரு பகுதியில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல அதிகாலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க செல்லவும் போலீசார் தடை விதித்தனர். இதனால் சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்