search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை பொய்த்து விட்டதால் வாழைத்தார்கள் விலை கிடுகிடு உயர்வு
    X

    பருவமழை பொய்த்து விட்டதால் வாழைத்தார்கள் விலை கிடுகிடு உயர்வு

    • குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.
    • வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக மட்டி, செவ்வாழை, ரசக்கதலி, ரோபஸ்டா உள்பட பல்வேறுவிதமான வாழைப்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் வாழைத் தார்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் பருவமழையை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குமரி மாவட்டத்தில் பொய்த்து போய்விட்டது. இதனால் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட வாழைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் உள்ளது. சில விவசாயிகள் மோட்டார் மூலமாக தண்ணீரை வைத்து வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதனுடைய உற்பத்தி குறைவாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூடிய வழைத்தார்களின் வரத்து குறைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மட்டி பழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. மட்டி வாழைத்தார் ரூ.1000-க்கு மேல் விற்பனை ஆகிய வருகிறது. இதேபோல் ரசக்கதலி வாழைப்பழத்தின் விலையும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. ரசக்கதலி வாழைத்தார் ஏற்கனவே ரூ. ௨௫௦ முதல் ரூ.300 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது ரூ.800 முதல் ரூ.௮௫௦ வரை விற்பனையாகி வருகிறது. பாளையங்கோட்டை பழமும் கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாழை பழத்தை பொறுத்த மட்டில் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ செவ்வாழை ரூ.65-க்கு விற்பனை யானது. ஒரு வாழைத்தார் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏத்தன் பழத்தின் விலையும் அதிகமாகியுள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட ஏத்தன்பழம் தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. ரோபஸ்டா, நாட்டுபழம், சக்கை பேயன் விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்கள் விலை 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்காக வரும்.ஆனால் தற்போது பருவமழை பொய்த்து விட்டதால் வழைத்தார்கள் வரத்துகுறைவாகி உள்ளது. மேலும் ஆவணி மாதம் திருமண சீசன் அதிகம் இருக்கும்.இதனால் மக்களுக்கு பழத்தின் தேவை அதிகமாக தேவைப்படும். வரத்து குறைவாகஉள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளது. இது மட்டும் இன்றி ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் இருந்து வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துபழங்களை வாங்கி செல்வார் கள். தற்போது ஓணம் பண்டிகை 29-ந்தேதிகொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வியா பாரிகள் கேரளாவில் இருந்துபழங்களை வாங்குவதற்கு வருகி றார்கள். ஆனால் போதிய அளவு வாழைத்தார்கள்இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது என்றார்.

    Next Story
    ×