என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறை கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் புதிய திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்த காட்சி.
கருணாநிதி நூற்றாண்டு விழா- சிறை கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

- சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை, உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
- அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் சிறைத் துறையின் மானிய கோரிக்கையின்போது சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறை துறைகள் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி கைதிகளின் நலனுக்காக நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை ஆண்டுக்கு ரூ.26 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.