search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவு நாள்: 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
    X

    கருணாநிதி நினைவு நாள்: 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம்.
    • தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி செல்கின்றனர். அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

    இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்டக் கழக செயலா ளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    Next Story
    ×