என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரூரில் 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
- கரூரில் 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது
- மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணில் (0432438670) தொடர்பு கொள்ளலாம்.
கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்திலும் அன்றைய தினம் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதால் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிலோ தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணில் (0432438670) தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள். காசோலை மோசடி வழக்குகள், கடன் தொழிலாளர் நல வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.