என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி கடனுதவி
    X

    2392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி கடனுதவி

    கரூரில் 2392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி கடனுதவி வழங்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 46 கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, 221 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக உள்ள 2,392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கடன் தொகையினை வழங்கி பேசும்போது,பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்,மகளிர்களின் குடும்ப பொருளாதார நிலையினை உயர்த்திடும் விதமாக 10.30 சதவீதம் குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 182 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 2,215 உறுப்பினர்களுக்கு ரூ.19.16 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. அடுத்தபடியாக கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் விதமாக 34 நியாய விலை கடைகளுக்கு க்யூ ஆர் கோடு வழங்கக்கூடிய அந்த நிகழ்வும் அதே போல இரண்டு நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலேயே நமது மாவட்டத்தில் தான் 21 நியாய விலைக் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகின்றது. வரும் காலங்களில் அனைத்து கடைகளிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவிநியோகத்திட்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×