search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள்
    X

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள்

    • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கம் அளித்துள்ளார்
    • சிலைகளுக்கு வாணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை

    கரூர்,

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP),பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோன் (பாலிஸ்டிரின்) கலனைய ற்றதுமான,சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நா நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உணர்ந்த மலர் கூறுகள், வைக்கோல்

    போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்குமரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வனக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகத்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வாணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×