என் மலர்
உள்ளூர் செய்திகள்

திடீர் மின் நிறுத்தத்தால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
- முன் அறிவிப்பு இன்றி திடீர் மின்னிறுத்தம் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்
- பகல் 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை தொடர்ந்து பவர்கட்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் பகளூர் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் வேலாயுதம்பாளையம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கந்தம்பாளையம் வரை சாலை விவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திடீரென மின்னிருத்தம் செய்யப்பட்டது. இதனால் வேலாயுதம்பாளையம், மலை நகர், புகழி நகர், ரவுண்டானா, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 11.00 மணி மாலை 5.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப் பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Next Story






