என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய டிரைவர் உயிருடன் மீட்பு
    X

    விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய டிரைவர் உயிருடன் மீட்பு

    • விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்
    • முன்னாள் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது

    கரூர்:

    கரூர் அருகே, விபத்துக்குள்ளாகி, லாரியில் சிக்கி கொண்ட டிரைவரை, தீயணைப்பு துறைனர் உயிருடன் மீட்டனர்.

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியை சர்ந்தவர் மணிகண்டன், (வயது35) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, சிவகாசியில் இருந்து ரப்பர் லோடுகளை ஏற்றிக்கொண்டு, சூருக்கு புறப்பட்டார்.

    கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காணப்பரப்பு பகுதியில், நேற்று காலை மணிகண்டன் ஓட்டி வந்த லாரி, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது.

    இதில், மணிகண்டனின் இரண்டு கால்களும் லாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று, மணிகண்டனை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×