என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டத்திற்கு சென்ற பெண் அடித்துக் கொலை
    X

    தோட்டத்திற்கு சென்ற பெண் அடித்துக் கொலை

    • தோட்டத்திற்கு சென்ற பெண்ணை அடித்துக் கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    • திருச்சி சிறையில் அடைத்தனர்

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பில்லூர் ஊராட்சி பெரியவீட்டுக்கா ரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி வசந்தா (வயது 39). இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி கொத்தனார் வேலைக்கும், வசந்தா தங்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு வேலைக்கும், இவர்களது மகள் பள்ளிக்கும் சென்று விட்டார்.

    இந்தநிலையில் மாலை வெகுநேரம் ஆகியும் வசந்தா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தாவின் கணவர் முத்துசாமி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் வசந்தாவின் செருப்பு மட்டும் தோட்டத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றின் மேல் பகுதியில் கிடந்துள்ளது. இதைக்கண்ட உறவினர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி வசந்தாவை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வசந்தாவின் கணவர் முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் சரோஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரோஜா முன்விேராதம் காரணமாக வசந்தாவை களைக்கொத்தி மரக்கட்டையால் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து தோகைமலை போலீசார் கொலை வழக்குப்பதிந்து, சரோஜாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தோகை மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    Next Story
    ×