என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு ஆய்வு பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு ஆய்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/17/1951515-download1.webp)
பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு ஆய்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பரமத்தி வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை களப்பயணமாக பார்வையிட்டனர். 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பற்றி பாடம் உள்ளது. இந்த பாடங்களில் உள்ள பாடத்திட்டத்தின் செயல்பாடுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ள எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், துணை நீதிமன்றம், நீதிமன்ற பதிவு அறைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். நீதிபதிகள் மாணவ, மாணவியர்கள் இடையே இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை பற்றி விரிவாக கூறினார்கள். அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளை பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த களப்பயணம் மாணவர்களின் இடையே தங்களது ஜனநாயக கடமை, சமூகப் பொறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக அமைந்தது. இவர்களுடன் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தினி மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு வந்த மாணவ, மாணவியர்களை ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.