என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரூர் பகுதியில் அறுவடை செய்யப்படாத வெற்றிலை
- வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
- இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான, நொய்யல், மரவாபாளையம், புங்கோடை ,சேமங்கி, கோம்புப்பாளையம், நத்தமேட்டுப் பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகளூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது புகளூர் பகுதியில் ஆள் பற்றாக்குறை, வெற்றிலையில் நோய் தாக்குதல், போதிய தண்ணீர் இன்மை என்ற பல்தொவேறு காரணங்களால் வெற்றிலை விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் வெற்றிலை விவசாயம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.வெள்ளக்கொடி வெற்றிலை 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ. 7,000-க்கு விற்பனையானது. அதேபோல் கற்பூரி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு கட்டு ரூ.3000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெற்றிலை விவசாயத்தில் ஈரப் புள்ளி என்கின்ற நோய் தாக்கல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. பத்து நாளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விற்பனை குறைந்துள்ளதால் சில இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அறுவடை செய்யப்பட்ட வெற்றிலையை பாதுகாக்க இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை. பலமுறை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை குளிர்பதன கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு, கிடங்கு கட்டித்தர அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.