search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா
    X

    செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா

    • கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 23-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 28-ந்தேதி காலை கும்பாபிஷேகம், மகாதீபாராதனை, முழுக்காப்பு தரிசனம், இரவு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. 29-ந்தேதி மாலை குடியழைப்பு, நேற்று உச்சிக்கால பூஜை, பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு கொடைவிழா நடந்தது. இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது.

    Next Story
    ×