search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளவனூர் அருகே இலைகள் விழுந்ததை தட்டிக் கேட்ட கூலித் தொழிலாளி கொலை
    X

    வளவனூர் அருகே இலைகள் விழுந்ததை தட்டிக் கேட்ட கூலித் தொழிலாளி கொலை

    • அரிகிருஷ்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்து சென்னை - கும்பகோணம் சாலையில் ப.வில்லியனூர் கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்தராஜ் (38). இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி உறவு முறைகொண்டவர்கள். இருவருமே விவசாயக் கூலி மற்றும் சமையல் வேலை தொழிலாளிகள். இதில் ஆனந்தராஜ் வீட்டில் இருந்த மரத்தின் இலைகள், அரிகிருஷ்ணன் வீட்டில் விழுந்து வந்தது. எனவே, மரக்கிளைைய வெட்டுமாறு ஆனந்தராஜிடம் அரிகிருஷணன் கூறியுள்ளார்.

    இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்க வந்த ஆனந்தராஜ் நடந்தது தொடர்பாக மனைவி மற்றும் மகன்களிடம் கூறினார். தொடர்ந்து அனைவரும் அரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பேசினர். அப்போது வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

    அப்போது ஆனந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அரிகிருஷ்ணனின் தொடையில் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அரிகிருஷ்ணன் மயங்கிவிட்டார். இது குறித்த தகவலி்ன் பேரில் வளவனூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தொடர்ந்து அரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜ், அவரது மனைவி விஜயா, மூத்த மகன் ஈஸ்வரன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்தராஜின் 17 வயது மகன், 15 வயது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×