search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  பதிவு செய்யாத இறால் பண்ணைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை: மீன்வளத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை
    X

    காரைக்காலில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை: மீன்வளத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை

    • காரைக்காலில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • நேரிடையாக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஆவண செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மீன்வளத் துறையில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் செயல் பட்டால், சட்டரீதி யான நடவ டிக்கை பாயும். என, மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தரபாண்டி யன், இது குறித்து வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டத் தில்உள்ளஇறால் வளர்ப்புபண்ணை உரி மையாளர்கள் தங்கள் இறால் பண்ணைகளை பதிவு செய்யவும், பதிவை புதுப்பித்து கொள்ளவும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் எளி மைபடுத்தியுள்ளது. ௨ ஹெக்டேருக்கு மேல் அளவுள்ள இறால் பண்ணை களை, மாவட்ட அளவிலான குழ பரிந்துரை செய்து மாநில குழுவிற்க்கு அனுப்பி, பிறகு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு பதிவு செய்ய அனுப்புவது என்ற நடைமுறையை எளிமை யாக்கி உள்ளது. தற்போது அந்தந்த மாவட்டங்களிலே விண்ணப்பித்து அதற்கென உள்ள குழு மூலம் பரிந்துரை செய்து நேரிடையாக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஆவண செய்யப் பட்டுள்ளது.

    மேலும், 2 மாதத்திற்குள் பதிவு தேதி முடிய உள்ள பதிவுகளை புதுப்பித்து கொள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் கட லோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு, நேரிடையாகவே உரிய ஆவணங்களுடன் அனுப்பி பதிவை புதுப்பித்து கொ ள்ளலாம். மேலும், காரைக்கால் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத இறால் பண்ணைகள் செயல்பட அனுமதியில்லை. அவ்வாறு பதிவு செய்யப்படாத இறால் வளர்ப்பு பண்ணை கள் இறால் வளர்ப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டால் தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிகை பாயும் என்பதை காரைக்கால் மீன் வளத்துறை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×