என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ByTNLGanesh23 July 2023 2:02 PM IST
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- பெண் கல்வி, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் விளக்கி பேசினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் உள்ள எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின்படி, எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார்.
இதில் 10 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி செய்திருந்தார்.
Next Story
×