search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு கள ஆய்வு
    X

    சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் தென்காசி மாவட்டத்தில் கள ஆய்வு நடத்திய காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு கள ஆய்வு

    • சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் நடந்தது.

    சட்டமன்ற உறுப்பி னர்கள், கடலூர் அய்யப்பன், சூலூர் கந்தசாமி, சேந்தமங்கலம் பொன்னுசாமி, விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் சதன்திரு மலைக்குமார், தென்காசி பழனிநாடார் மற்றும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர், கோரிக்கை மனுக்கள் குறித்து கட்டளை குடியிருப்பு, பூலாங்குடியிருப்பு சாலை, இலத்தூர், நயினாரகரம் அப்துல்கலாம் தெரு, சங்குபுரம் பகுதி, சாம்பவர் வடகரை பேரூராட்சி வித்தன்கோட்டை கிராமம், தென்காசி நகரத்தின் மையப்பகுதியிலுள்ள சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், செங்கோட்டை என்.எச். சாலையில் இருந்து கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

    அப்போது செங்கோட்டை நகராட்சி மூலம் சாலை அமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகர்சாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் , துணைத் தலைவர் சுப்பையா, சாம்பவர்வடகரை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×