என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெரியார் பெற்று தந்த சமூக நீதி என்ன என்று பேசுங்கள் பார்க்கலாம்- சீமான் மீண்டும் சர்ச்சை
- பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.
- எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
தமிழ் மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தவர்கள் இன்று வரை யாரும் இல்லை. மொழி ஆய்வு அறிஞர்கள் தமிழை கண்டு வியந்து பார்க்கிறார்கள். திருக்குறளை கண்டு உலக மொழி ஆய்வு அறிஞர்கள் வியக்கிறார்கள்.
திருக்குறளை ஆங்கிலத்தில், இந்தியில் படித்து காந்தி வியந்தார். உலகு எங்கும் தமிழை நோக்கி ஓடிவந்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 50-க்கும் மேற்பட்ட சொற்களை கடனாக கொடுத்தது தமிழ்மொழி. ஏசு இறைமகன் பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஆங்கில மொழி பிறக்கிறது.
ஆனால் ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பு இருந்து தமிழ் மொழி இருந்து வருகிறது. ஆட்சியாளர்கள் தமிழர்கள் பெருமையை இப்போது சொல்லி வருகிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி, முட்டாளின் பாஷை, தமிழ் படித்தால் பிழைக்க முடியாது என்று சொன்னவர்களை ஒழிக்கமால் எப்படி தமிழை வளர்ப்பது.
தமிழ் எங்களுக்கு பேச்சு மொழி அல்ல. மூச்சு மொழி, மற்றவர்களுக்கு மொழி, எங்களுக்கு உயிர். 800-க்கும் குறையாதவர்கள் தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள். வாயை திறந்தால் இது பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.
பெரியாரை அடக்கம் செய்து இருப்பது தமிழ் தாய் மண் தான். பெரியார் இல்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் நிலையில் பெரியாரால் எங்களுங்கு ஒன்றும் இல்லை.
பெரியார் சமூகநீதி, சமத்துவம் சகோ தரத்துவம் ஜாதி ஒழிப்பு, பெண்ணியம் உரிமை எங்கே? எதற்கு எடுத்தாலும் திராவிடம், பெரியார்.
தீரன் சின்னமலை, கொடிக்காத்த குமரன், பொன் சங்கர், காளிங்க ராயன் வாழ்ந்தவர்கள் மண் இது. அவர்களின் வாரிசுகள் நாங்கள்.
அப்படி இருக்கும் நிலையில் பெரியார் பேசியது, எழுதியது எந்த மொழி என்பதற்கு பதில் இருக்கிறதா? மொழி, இனம் பாகுபாடு இல்லை என்று சொன்ன பெரியார். எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார். தேசமே இல்லை, தேசப்பற்று இல்லை, தேச அபிமானம் இல்லாத நிலையில் எப்படி திராவிட நாடு வரும்.
தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் நாங்கள். தமிழ் இல்லாமல் தமிழர்கள் எப்படி வந்தார்கள். தமிழ் இல்லை என்று சொன்ன நிலையில் தமிழினத்தின் தலைவராக பெரியார் பட்டம் எப்படி வைத்து கொண்டீர்கள். இதுபோன்ற செயலுக்கு பெயர் தான் பிக்காளி தனம்.
பிக்காளி என்றால் சுத்த பைத்தியக்காரன் என்று எங்கள் ஊரில் சொல்வா ர்கள். திடீர் கிளம்பும் பெரி யார் பக்தர்கள், இதே போல மேடை போட்டு பெரியார் பெற்று தந்த சமூக நீதி என்ன என்று பேசுங்கள் பார்க்கலாம். அப்படி மேடை போட்டு பேசுபவர்கள் பெரியாரை பேசு வார்கள்.
பெரியார் பேசியதை பேச முடியுமா? பெரியார் புகழ் பாடுபவர்கள் பெரியார் படத்தை கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே. காந்தி படம் போட்ட நோட்டை கொடுத்து வாக்கு கேட்கிறார்கள்.
காந்தி படம் இல்லையென்றால் மக்கள் உங்கள் மீது எடுத்து விடுவார்கள் வாந்தி. நீ அடைந்து விடுவாய் சாந்தி. நீ ஊசி பூ பூந்தி இப்படி என்னை டி.ராஜேந்திரன் ஆக்கி விடுவார்கள் போல இருக்கிறது.
இதனால் காந்தி போட்ட பணம் கொடுத்து வாக்கு கேட்கும் உங்களுக்கு தலை வர் பெரியார் இல்லை, உங்கள் தலைவர் காந்தி தான். நாம் தமிழர் கட்சி மீது வீசப்படும் எறியப்படும் கற்களை கொண்டு கோட்டை கட்ட வந்த மக்கள் நாங்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெரும் தலைவர் செய்ததை சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.
நான் பிரபாகரனை தூக்கி கொண்டு வருகிறேன். பிரபாகரன் செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறேன். சீமான் பெரியார் பற்றி பேசுகிறான், திட்டுகிறான் ஓட்டுபோட வேண்டாம் என்று சொல்ல துணிவு இருக்கா? பெரியார் தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தினை வெட்டினார்.
இது அறிவார்ந்தவர்கள் செய்த செயலா? பெரியார் தாய்மொழி தமிழா? நீங்கள் இந்த நாட்டவரா? எதற்காக சொல்ல வந்த கருத்துக்களை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தமிழ் மொழியில் எழுதினார். வேண்டுமெனில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்று இருந்தால் நாங்கள் படித்து இருக்க மாட்டோம்.
பெரியார் வாரிசு இல்லை, எதற்காக சொத்து சேர்த்தீர்கள், இது ஒரு டிரைலர் தான். தொடர்ந்து, பெரியார் பற்றி பேசினால் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. திராவிட அரசியல் சித்தாந்தத்தின் தொடக்கம் பெரியார் என்று சொன்னால் அதே இடத்தில் தமிழ் தேசியம் குறித்து மோதிக்கொள்ள நாம் தமிழர் கட்சி தயார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா என்று தெரியவி ல்லை. இருட்டில் திருட்டு கோழி பிடிப்பது போன்று தான் உள்ளது. நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம்.
பெரியார் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழர்கள் என்று சொல்லி இனம் மொழி முன் வைத்து இறக்கப்பட்ட புலிக் கொடியை தூக்கி தற்போது 8.50 லட்சம் வாக்குகள் மூலம் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று உள்ளோம்.
1 கோடியே 72 லட்சம் வாக்குகளாக நாம் தமிழர் கட்சியால் மாற்ற முடியாதா. அதனால் மைக் சின்னத்திற்கு வாக்களித்து புதிய அரசியல் தொடக்கமாக ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்குகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் பெரியார் குறித்து பேசிய இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.