search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்.ஐ.சி.யில் 2.17 கோடி புதிய பாலிசிகள் சேர்ப்பு: ரூ.1.98 லட்சம் கோடி பிரீமியம் வருவாய்
    X

    எல்.ஐ.சி.யில் 2.17 கோடி புதிய பாலிசிகள் சேர்ப்பு: ரூ.1.98 லட்சம் கோடி பிரீமியம் வருவாய்

    • எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
    • தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது.

    சென்னை :

    எல்.ஐ.சி. நிறுவனம் 67-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் (மார்ச் 31-ந்தேதி வரை) 2.17 கோடி புதிய பாலிசிகளை பெற்று முதல் பிரீமிய வருவாயாக ரூ.1.98 லட்சம் கோடிகளை ஈட்டி உள்ளது. இதன்மூலம் 7.92 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    நடப்பு ஆண்டிலும் எல்.ஐ.சி. முதல் பிரீமிய வருவாய் அடிப்படையில் 64.96 சதவீதம் சந்தை பங்களிப்பை பெற்றுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் எல்.ஐ.சி. 267.23 லட்சம் உரிமங்களுக்காக ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 568 கோடிகளை அளித்துள்ளது.

    31.3.2022 அன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யில் தனி நபர் வணிகத்தின் கீழ் பல்வேறு விதமான மக்களின் தேவைகளுக்காக 33 விதமான திட்டங்கள் விற்பனைக்கு உள்ளன. பீமா ரத்னா, தன் சன்சய் என 2 புதிய திட்டங்களை எல்.ஐ.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

    மாறிவரும் காலத்துக்கு ஏற்ப பாலிசிகளை திறம்பட சேவை செய்வதற்காக நவீன தொழில்நுட்பங்களை எல்.ஐ.சி. அறிமுகம் செய்து வருகிறது. பாலிசிதாரர்கள் தங்களது பிரீமியத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம். பென்ஷன் பாலிசிதாரர்களுக்கான டிஜிட்டல் இருப்பு சான்றிதழை சமர்ப்பிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 'ஜீவன் சாக்‌ஷயா' என்ற செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    எல்.ஐ.சி.யின் பொன்விழா பவுண்டேஷன் என்.ஜி.ஓ.க்கள் மூலமாக 646 திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, உரிமத்தீர்வு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வணிகம் போன்றவற்றின் அடிப்படையில் பல விருதுகளை எல்.ஐ.சி. பெற்றுள்ளது.

    இந்த 66-வது ஆண்டு நிறைவு விழாவில், எங்கள் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கைக்காக பாலிசிதாரர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உங்களது நலனே எங்களது பொறுப்பு என்பதற்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×