என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் பரபரப்பு லாட்டரி சீட்டு விற்பனையாளருக்கு சரமாரி கத்திக்குத்து: 2 பேர் கைது
- பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
- பெருமாளை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45)இவர் பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி. இந்நிலையில் பெருமாள் இவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திண்டிவனம் தலவாதி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
அப்போது பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாளின் நண்பர்கள் 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெருமாளை சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார்.பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த ஓட்டலில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ரோசணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ரோசணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாளை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இவரது நண்பர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி காரணமாக இவரை கத்தியால் குத்தினார்களா ? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திண்டிவனம் முருகப்பாக்கத்தை சேர்ந்த அன்புராஜன், சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் ஆகியோரை ரோசனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.