என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா காளியம்மன் கோவில் தேர் திருவிழா
    X

    முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேரை, வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி.

    மகா காளியம்மன் கோவில் தேர் திருவிழா

    • மகாகாளி அம்மனை வைத்து பூஜை செய்து பெண்களும் ஆண்களும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    • தேர் அசைந்தாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கோவிலை வந்து அடைந்தது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அருகே உள்ள செந்தில் நகரில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவிலில் 123-வது ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழாவின் ஒரு பகுதியாக அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாகாளி அம்மனை வைத்து பூஜை செய்து பெண்களும் ஆண்களும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேர் அசைந்தாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கோவிலை வந்து அடைந்தது.

    பக்தர்கள் தேர் திருவிழாவில் மாவிளக்கு எடுத்தும் ஆடுகள் பலியட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்.

    இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×