என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மசாஜ் தொழிலாளர்கள் பேரவை கூட்டம்
- சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேன க்கல்லில் நடைபெற்றது.
- ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவடடம் ஒகேனக்கலில் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேன க்கல்லில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மசாஜ் தொழிலாளர்களை சுகாதார தொழிலாளர்களாக மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை உதவித் தொகையுடன் கூடிய இலவச கல்வி வழங்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், கொரோனா கால நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ.7500 வழங்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்க மாதேஷ், முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் நஞ்சப்பன், மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் கலை செல்வம், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மாதையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.