search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே 1-ந்தேதி தொடங்குகிறது: மூணாறு மலர் கண்காட்சியில் பூத்து குலுங்கும் பூக்கள்
    X

    மூணாறு பூங்கா (கோப்பு படம்)

    மே 1-ந்தேதி தொடங்குகிறது: மூணாறு மலர் கண்காட்சியில் பூத்து குலுங்கும் பூக்கள்

    • கேரள சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக 1500-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடப்பட்டன.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    இதமான சீதோஷ்ண த்துடன் வனப்பகுதியில் இயற்கை அழகுகளை கண்டு ரசிப்பது மனதிற்கு ரம்யமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

    கேரள சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மூணாறு பாலாற்றின் கரை அருகே உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக 1500-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடப்பட்டன.

    தற்போது இதில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துகுலுங்குகின்றன. காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை பார்வ யைாளர்கள் அனுமதிக்க ப்படுவார்கள். நுழைவு கட்டணமாக பெரியவர்க ளுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.35 -ம் வசூலிக்கப்படு கிறது. மேலும் மலர்கண்காட்சியில் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    அடுத்த வாரம் தேர்வுகள் அனைத்தும் முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்படும். அதன்பி ன்னர் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×