என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மாற்றுப் பொருளை பயன்படுத்த வேண்டும்- மத்திய மந்திரி வேண்டுகோள்
- பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்.
- மாவட்டங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து அகற்ற ஏற்பாடு.
நந்தம்பாக்கம்:
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் தயாரிப்பு குறித்த தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை மந்திரி பூபேந்தர் யாதவ்,
பிளாஸ்டிக்கால் கணினி, செல்போன் போன்ற நன்மைகள் கிடைத்துள்ள போதும், பல தீமைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றார். கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்ட என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நினைவு கூர்ந்தார்.
பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மரம், சணல், மூங்கில் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது என்றார். புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுத்து அகற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆவின் பால் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.