search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி கூட்டுறவு வாரவிழாவில் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் -அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்
    X

    கூட்டுறவு வாரவிழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பலர் உள்ளனர்.

    தேனி கூட்டுறவு வாரவிழாவில் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் -அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்

    • தேனியில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் வழங்கினார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார் (பெரியகுளம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 17,454 விவசாயிகளுக்கு ரூ.187.68 கோடி பயிர்க்கடன் வழங்க ப்பட்டுள்ளது. நடப்பா ண்டில் (2023-24) இதுவரை 10,675 விவசாயிகளுக்கு ரூ.126.51 கோடி பயிர்க்க டனாக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் கூட்டுறவுச் சங்க ங்கள மூலம் பயிர்க்கடன், நகை ஈட்டின்பேரில் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் விளை பொரு ட்கள் சந்தைப்படுத்துதல், கிட்டங்கி வசதி அளித்தல், தானிய ஈட்டின் பேரில் கடன், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்குக் கடன் வழங்கல், டாப்செட்கோ, டாம்கோ திட்டங்களின் கீழ் கடன் வழங்கல், மத்திய கால கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ஊரகப் பொருளா தாரம் மேம்படவும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகின்றன என பேசி னார்.

    கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 995 நபர்களுக்கு ரூ.11.8 கோடி மதிப்பிலான பயிர்க்கடனும், 198 நபர்களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடனும், 941 நபர்களுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், 23 நபர்களுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான மத்திய கால கடனும், 28 நபர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சிறுவணிக்கடனும், 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கடனும்,

    7 மகளிருக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் தொழில் முனைவோர் கடனும், 2 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான விவசாயம் அற்ற கடனும், 3 நபர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சிறுகுறு தொழில் முனை வோர் கடனும், ஆதரவற்ற விதவைக் கடனாக ஒரு நபருக்கு ரூ.50,000மும், 12 நபர்களுக்கு சம்பளக் கடனாக ரூ.1.55 கோடியும் என மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    Next Story
    ×