என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுக்க முடிவு.
- நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தரம் உயர்த்தப்பட்ட ரேடியோ கதிரியக்கவியல் துறை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக தமிழகத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் கூடுதலாக இவ்வளவு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது மருத்துக் கல்லூரி வரலாற்றில் இதுதான் முதன்முறை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மட்டும்தான் 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது.
நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டஙகளில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் வகையில், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட்டை உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.